அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் பேச்சு

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு, அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.

 

 

அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் கண்டிப்பதோடு, இலங்கையின் ஒருமைப்பாட்டை அவருக்கு உறுதிப்படுத்தினேன். இலங்கை உறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் நிற்பதுடன், எவ்வகையிலும் உதவத் தயாராக உள்ளது” என தொலைபேசி அழைப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதல்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Back to top button