இன்றைய ராசிபலன்- மேஷம் முதல் மீனம் வரை

மேஷம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர். குழப்பம் நீங்கி வீட்டில் நிம்மதி பிறக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். பூர்வீக சொத்து வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: தாய்வழி உறவினர்களிடம் மனக்கசப்புகள் வரலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவு வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

மிதுனம்: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது ஆபரணம், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர் ஆதரவு தருவார். பணியாட்களிடம் கனிவாக பேசவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். கனிவான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் மற்றவர் பிரச்சினையில் தலையிடாதீர்.

சிம்மம்: இழுபறியாக இருந்த பணிகள் முடியும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.

கன்னி: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். உடல் நலத்தில் கவனம் அவசியம். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்.

துலாம்: தடைபட்டு கொண்டிருந்த சுபகாரியம் இனி தடபுடலாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். வியாபாரரீதியாக சில முக்கிய பிரபலங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

விருச்சிகம்: புதுப்புது எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. உடல் நலம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம் திருப்தியாக அமையும். பங்குதாரரின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு: திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீடு, விவசாய நிலம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தருவார்கள்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தம்பதிக்குள் மனம்விட்டு பேசுவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

மீனம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். பிள்ளைகளால் இருந்து வந்த மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

Related Articles

Back to top button