வவுனியா பரபரப்பு – பயணத்தின் போது தீப்பற்றி எரிந்த சைக்கிள்

வுனியா – ஏ9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

 

வவுனியா நகரப் பகுதியில் இருந்து ஏ9 வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம், முருகன் கோவிலடியை அண்மித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

 

 

இதனையடுத்து அதில் பயணித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு  நிலத்தில் வீழ்ந்து தப்பியுள்ளனர்.

 

 

இதன்போது, அப்பகுதியில் நின்ற இளைஞர்கள், பொது மக்கள் நீர் மற்றும் மண் என்பவற்றை போட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

Related Articles

Back to top button