சிவராத்திரி தின வழிபாடுகளில் வெடுக்குநாறியில் சுதந்திரமாக வழிபடலாம்

வவுனியா வடக்கு (Vavuniya North)- ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படும் என வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க(Upali Samarasinghe) தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது.

இதன்போது, சிவராத்திரி வழிபாட்டுக்கு இடமளித்து, சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமென்று, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தில் விடுத்திருந்தார்.

 

 

இது தவிர சைவமக்கள் சுதந்திரமாக வழிபட இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

இந்தநிலையிலேயே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button