இன்றைய ராசிபலன்-23 ஜனவரி 2026

மேஷம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். புதிய சிந்தனைகள் உதிக்கும். வியாபாரத்தில் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். வீட்டுக்கு புதிய பொருட்கள் வந்து சேரும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை, குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணருவீர். சொந்தம் பந்தங்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன் மனைவிக்குள் அனுகூலம் உண்டு. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

 

துலாம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு தருவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

தனுசு: நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பீர்.

மகரம்: எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

கும்பம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் நற்பெயர் கிடைக்கும்.

மீனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து போகும். பண விஷயத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

Related Articles

Back to top button