யாழ்-ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் (Jaffna)வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (21.01.2026) பிற்பகல் 8:30 மணியளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆழியவளை செம்மண் வீதி அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர் பாதுகாப்பான முறையில் அகற்றியுள்ளனர்.

 

 

 

இந்நிலையில் அதனை மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button