கோதுமை மாவு விலை அதிகரிப்பு – பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலையும் உயர்வு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ள நிலையில், இதன் தாக்கமாக சிற்றுண்டிகளின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று (29) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகளையும் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, குறித்த சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவை முக்கிய மூலப்பொருளாகக் கொண்ட உணவுப் பொருட்களின் விலைகளில் இந்த மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




