தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் புதிய அப்டேட் அறிமுகமானது

Desktop Image Mobile Image

உலகில் அதிகளவானோர் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில், பயனர்களுக்காக புதிய அப்டேட்கள் வந்துள்ளன.

அதன்படி, வாட்ஸ் அப் குழுக்களில் புதிதாக சேருபவர்கள், தாங்கள் இணைவதற்கு முன்பு பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் குழுவில் சேரும் புதிய நபர் கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை பார்க்க முடியும்.

 

 

இந்த அம்சத்தை குழு அட்மின்கள் மட்டுமே தேர்வு செய்யலாம். மேலும் அந்த செய்திகள் யாரால் எப்போது பகிரப்பட்டது என்பதும் தெரியும்.

 

 

அட்மின்கள் விருப்பப்படி இந்த அம்சத்தை இயக்கவோ, முடக்கவோ முடியும். அதற்காக செட்டிங்கில் தனி ஆப்ஷன் கிடைக்கும்.

இந்த புதிய வசதி வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

Related Articles

Back to top button