ஜோதிடம்

ராசிபலன்-12 ராசிகளுக்கான முழு பலன்கள்

Desktop Image Mobile Image

மேஷம்

இந்த வாரம் உற்சாகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வீர்கள். மனக்குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பணவரவும் கிடைக்கலாம்.

ரிஷபம்

உங்களைச் சுற்றியிருந்த தேவையற்ற பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். பழைய மின்சாதனங்களை மாற்றும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

பிள்ளைகளின் சாதனைகள் உங்களுக்கு பெருமை சேர்க்கும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றும் வாய்ப்பு உள்ளது. அலுவலக நண்பர்களின் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். உதவி தேடி வருபவர்களுக்கு இயன்ற அளவில் ஆதரவளிப்பீர்கள். சமூக மரியாதையும் உயரும்.

கடகம்

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீடு மகிழ்ச்சியால் நிறையும். புதிய நட்புகள் உருவாகும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மன அழுத்தம் குறைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தத் தொடங்குவீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கும் வாரமாக இருக்கும்.

சிம்மம்

முக்கிய நபர்களின் அழைப்பின் பேரில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை மற்றும் மரியாதை கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பங்குதாரர்களுடன் நல்ல ஒத்துழைப்பு உருவாகும். பேசும் வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.

கன்னி

நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் சுமுகமாக நிறைவேறும். உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும். முக்கியமான நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கப்படலாம். அவசரமாக பேசுவதைத் தவிர்ப்பது நன்மை தரும்.

துலாம்

சிறிய கவலைகள் வந்தாலும் விரைவில் விலகும். உங்கள் கருத்துகளை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக பேசுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க முடியும். ஆன்மிகம், தியானம், யோகா போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம் மனநிறைவைத் தரும்.

விருச்சிகம்

வாங்கியிருந்த கடன்களை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு அமையும். கணவன்–மனைவி உறவு மேலும் வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை மேம்படும். தொழிலை விரிவுபடுத்த தேவையான நிதி உதவி கிடைக்கலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு

மன அமைதியுடன் முக்கிய பணிகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மகரம்

வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடன்பிறந்தவர்கள் முழு ஆதரவாக இருப்பார்கள். பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

கும்பம்

போட்டிகளையும் சவால்களையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மை உறவை வலுப்படுத்தும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து மனநிம்மதி பெறுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

தேவையற்ற அச்சங்களும் கவலைகளும் நீங்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதை திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையை பேணுவதற்கு விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். அரசு அல்லது வங்கி தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வீடு அல்லது அலுவலகத்திற்குத் தேவையான கலைப் பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும்.

Related Articles

Back to top button