ஜோதிடம்

12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்

Desktop Image Mobile Image

மேஷம்

உற்சாகத்துடன் செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். உடல்நலம் சீராகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

உங்களைச் சுற்றியிருந்த தேவையற்ற தொந்தரவுகள் குறையும். வெளியூர் பயணங்களால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். பழுதடைந்த மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.

மிதுனம்

பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்களின் தேவைகளை அறிந்து உதவுவார்கள். பழைய வாகனத்தை மாற்றும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத் தொடர்பான சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உதவி தேடி வருபவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

கடகம்

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். தேவையற்ற அலைச்சலும் மன அழுத்தமும் குறையும். எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

சிம்மம்

பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அலைச்சலும் மன அழுத்தமும் குறையும். பிள்ளைகளால் மரியாதை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் நீங்கி, பங்குதாரர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பேச்சில் நிதானம் அவசியம்.

கன்னி

நீண்டகாலமாக தடைபட்டிருந்த காரியங்கள் சுமுகமாக நிறைவேறும். உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். பல்வேறு வகையில் நன்மைகள் சேரும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.

துலாம்

சிறுசிறு கவலைகள் தோன்றி மறையும். நீங்கள் கூறும் கருத்துகளை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க முயற்சிப்பீர்கள். ஆன்மிகம், தியானம் மற்றும் யோகாவில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும்.

விருச்சிகம்

கடனாக பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள். கணவன்-மனைவி உறவு மேலும் வலுப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாயாரின் உடல்நிலை மேம்படும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

தனுசு

மனநிம்மதியுடன் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டைப் பெறும்.

மகரம்

வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும்.

கும்பம்

போட்டிகளையும் சவால்களையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். கணவன்-மனைவி உறவில் புரிந்துணர்வு அதிகரிக்கும். பணவரவு கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

தேவையற்ற அச்சங்களும் கவலைகளும் வந்து நீங்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கணவன்-மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்லுதல் அவசியம். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். அரசு மற்றும் வங்கி தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். கலை சார்ந்த பொருட்கள் சேரும்.

Related Articles

Back to top button