இந்தியா

சில்வர்ஸ்டோனில் அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்

Desktop Image Mobile Image

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தடத்துக்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அங்கு நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக சில்வர்ஸ்டோன் சென்ற முதலமைச்சர் விஜய், அஜித்தை சந்தித்தபோது அவரை ஆரத்தழுவி, போட்டியில் வெற்றி பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது விஜய்யும் அஜித்தும் இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மேலும், சில்வர்ஸ்டோனில் திரண்டிருந்த இங்கிலாந்து வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜயுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் ஆட்டோகிராபும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக ரசிகர்களால் வெவ்வேறு தரப்புகளாக கொண்டாடப்பட்ட விஜய் மற்றும் அஜித் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட இந்த தருணம் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் போட்டியில் அஜித்குமார் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Related Articles

Back to top button