உலக செய்திகள்உள்நாடு

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 4,333 ஆக உயர்வு – மீட்புப் பணிகள் தீவிரம்

Desktop Image Mobile Image

வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தப் பேரிடரில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதுடன், பல பகுதிகளில் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 4,333 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் மாயமானவர்களாகப் பதிவாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன், இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்தப் பேரிடரால் வெனிசுலாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மனிதாபிமான உதவிகளும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button