வவுனியாஉள்நாடுசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்து விபத்து: 23 வயது இளைஞர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (17.08.2026) காலை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து பாதையை கடக்க முயன்றபோதோ அல்லது தொடருந்து பாதைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோதோ இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் வவுனியா பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது கவனக்குறைவால் இடம்பெற்ற விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Back to top button