வவுனியாஉள்நாடுசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியா சாளம்பைக்குளத்தில் கோர விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Desktop Image Mobile Image

வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக நேற்று (02.09.2026) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக வீதியோரத்தில் ஒருவர் சோளம் விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மற்றுமொருவர் அவரிடம் சோளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், மன்னார் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீதும் மோதியுள்ளது.

விபத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு உடனடியாக வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

எனினும், சோளம் வாங்கிக் கொண்டிருந்த சாளம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரகீம் மஜீத் (31) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button