வவுனியாஉள்நாடுவடக்கு மாகாணம்

வவுனியா சூடுவெந்தபிலவில் விபத்து: ஒருவர் பலி; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Desktop Image Mobile Image

வவுனியா சூடுவெந்தபிலவு பகுதியில் இன்று (12) மாலை இடம்பெற்ற டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து சென்ற டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button