வவுனியாஉள்நாடுவடக்கு மாகாணம்

வவுனியாவில் விபத்து: மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சாரதி கைது

Desktop Image Mobile Image

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இன்று (31) இரவு சுமார் 8.40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் விபத்து: மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சாரதி கைது

ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திலேயே குறித்த சாரதியை பொலிஸார் கைது செய்து, மேலதிக மருத்துவ மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் குறுகிய நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button