வவுனியாஉள்நாடுவடக்கு மாகாணம்

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

Desktop Image Mobile Image

வவுனியாவில் 1700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் இன்று காலை விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 1700 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இந்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button