வவுனியாஉள்நாடுவடக்கு மாகாணம்
வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம்

வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தின நிகழ்வு இன்று (11) குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது.
இதன்போது மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரது பங்களிப்புகள் தொடர்பான நினைவுப் பேருரைகளை ஆற்றினர்.
வவுனியா மாநகர சபை ஆணையாளர் திருமதி சி. சிவரஞ்சினி தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவு நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



