Trincomaleeஉள்நாடுகிழக்கு மாகாணம்

திருகோணமலையில் பாடசாலையில் குளவிக்கொட்டு: 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Desktop Image Mobile Image

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நேரத்தில் திடீரென குளவிகள் மாணவர்களை தாக்கியதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு முதலுதவி வழங்கியதுடன், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த மாணவர்களில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததையடுத்து மாணவர்கள் மீது குளவிகள் கூட்டமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பின்னர் பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button