Trincomaleeஉள்நாடுகிழக்கு மாகாணம்

திருகோணமலையில் போதை தடுப்பு விழிப்புணர்வு நடைபவணி

Desktop Image Mobile Image

இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி இன்று (23) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இருந்து திருகோணமலை பேருந்து நிலையம் வரை பங்கேற்பாளர்கள் ஊர்வலமாக நடைபவணியில் ஈடுபட்டனர்.

 

 

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அருண்கேமச் சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன் மற்றும் ரொசான் அக்மீமன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் இளைஞர் சம்மேளனங்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பலரும் இதில் பங்கேற்றதுடன், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையாடல்களும் இடம்பெற்றன.

Related Articles

Back to top button