விளையாட்டு

2026 உலகக்கிண்ணம்: செக் குடியரசை வீழ்த்தி தென்கொரியா த்ரில் வெற்றி

Desktop Image Mobile Image

2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென்கொரியா அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் பல்வேறு தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் 0-0 என்ற சமநிலையுடன் இடைவேளைக்கு சென்றன.

இரண்டாவது பாதியில் ஆட்டம் விறுவிறுப்படைந்த நிலையில், 59-வது நிமிடத்தில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம் செக் குடியரசு 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

 

 

எனினும் பின்னடைவை சந்தித்த தென்கொரியா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக 67-வது நிமிடத்தில் ஹ்வாங் இன்-போம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து வெற்றிக்காக தீவிரமாக போராடிய தென்கொரியா அணிக்கு 80-வது நிமிடத்தில் ஓ ஹியான்-கியூ வெற்றிக்கோலைப் பதிவு செய்தார். இதன் மூலம் தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று, போட்டி முடிவில் முக்கியமான வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

 

 

பின்னடைவை வெற்றியாக மாற்றிய தென்கொரியாவின் போராட்ட மனப்பான்மை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், தொடரில் அந்த அணியின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.

Back to top button