கல்விஉள்நாடு

திறன்களை மையப்படுத்தும் புதிய கல்வி முறை

Desktop Image Mobile Image

நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மனனம் மற்றும் பரீட்சைகளை மையமாகக் கொண்ட முறைக்கு பதிலாக திறன்கள் மற்றும் நடைமுறை அறிவை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ள இந்த சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஆரம்பகட்டத் திட்டங்களும் தற்போது நிறைவு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

 

மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, தொழில் சந்தையில் தேவையுள்ள துறைகளுக்கேற்ப தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளை வழங்குவது புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல்கலைக்கழகக் கல்வியைப் போலவே தொழிற்கல்விக்கும் சமமான அங்கீகாரமும் மரியாதையும் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Back to top button