ஷிரந்தி ராஜபக்ச அதிரடிக் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் ‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணைக்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சார்பில் முன்பிணை கோரி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி முன்பிணை மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு நேற்று (06) அறிவித்துள்ளது.
இதனிடையே, ஷிரந்தி ராஜபக்ச கடந்த 5ஆம் திகதி இரவு வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியிருந்தார்.
‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


