பாவற்கொடிச்சேனையில் மர்ம கொலை; வயல் காவலாளி உயிரிழப்பு

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (24) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பாவற்கொடிச்சேனை தும்பாலஞ்சோலை பகுதியில் வயல் காவலாளியாக பணியாற்றிய நெடியமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் தலையில் வெட்டுக்காயம் காணப்படுவதாகவும், இது கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (25) காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.




