உள்நாடு

30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரி அதிரடி கைது!!

Desktop Image Mobile Image

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள குருநாகல் மாநகர சபையின் துணை மேயர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று(08.05.2026) பத்தரமுல்லை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

30 இலட்சம் ரூபாய் இலஞ்சத் தொகையை பெற்றுக்கொள்ளச் சென்றபோது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தல் மற்றும் பொதுக் கழிப்பறைகளை பராமரிக்கும் டெண்டரை வழங்குவதற்காக, பிரதி மேயர் இந்த இலஞ்சத் தொகையை கோரியதாக கூறப்படுகிறது.

 

 

றித்த டெண்டரை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபாயும், மாதந்தோறும் 5 இலட்சம் ரூபாய் வீதமும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 30 இலட்சம் ரூபாய் தொகையை பெற்றுக்கொள்ளச் சென்றபோதே, பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரதி மேயர் நாளை (09) அலுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button