மலையகம்உள்நாடுவானிலை

நாவலப்பிட்டியில் கனமழையால் மரம் முறிந்து வீடு சேதம் – 4 பேர் காயம்

Desktop Image Mobile Image

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றினால், மேல் இம்புல்பிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரத்தின் தாக்கத்தினால் வீட்டுக்குள் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

 

இதேவேளை, பலத்த காற்றின் காரணமாக அப்பகுதியில் பல மரங்கள் முறிந்து வீடுகள் மற்றும் பல்வேறு உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சீரற்ற வானிலை நிலவும் பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button