யாழ். நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை (09) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அறிவுறுத்தலின் பேரில், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இந்த விசேட விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பெருந்திரளான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெறும் நிலையில், அதனை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால் கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்மூலம் நல்லூர் தேர் திருவிழாவில் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.




