உள்நாடு

மத்துகமில் வீடு மீது துப்பாக்கிச்சூடு

Desktop Image Mobile Image

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, நேபொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) மாலை அடையாளம் தெரியாத குழுவொன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தத் தாக்குதலுக்கு ரி-56 (T-56) ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும், வீட்டு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Back to top button