உள்நாடு

இலங்கை வந்தடைந்தது எரிவாயு கப்பல்

Desktop Image Mobile Image

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7,000 மெட்ரிக் தொன் எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கையிருப்பைக் கொண்ட ‘எண்டோவர்’ (ANDOVER) கப்பல் ஹம்பாந்தோட்டை லாஃப்ஸ் முனையத்தை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வந்தடைந்தது எரிவாயு கப்பல்/Gas tanker arrives in Sri Lanka

இதற்கமைய, எரிவாயு சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் வினைத்திறனான முறையில் எரிவாயுவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இந்த எரிவாயு கையிருப்பு, உலகில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோகஸ்தரான நெதர்லாந்தின் ‘SHV Energy’ நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button