முல்லைத்தீவுஉள்நாடுவடக்கு மாகாணம்

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் கோர விபத்து: ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் சாரதி மீட்பு

Desktop Image Mobile Image

முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இன்று (09.08.2026) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பாரவூர்தி சாரதி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் மகேந்திரா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய பாரவூர்திச் சாரதியை மீட்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் போராட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதேவேளை, மகேந்திரா ரக வாகனத்தில் விற்பனைக்காக பெருமளவு இளநீர் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து இளநீர்கள் வீதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சிதறிக் கிடந்தன.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button