உள்நாடு

கேகாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 55 வயது நபர் கொலை; மருமகன் கைது

Desktop Image Mobile Image

கேகாலை மாவட்டம், கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலுகடுமெட்டியாவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலம் காணப்படுவதாக நேற்று (02) கிடைத்த தகவலையடுத்து கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளில் உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இந்நிலையில், உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான 34 வயதுடைய சந்தேகநபருக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆத்திரமடைந்த சந்தேகநபர் வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரை தாக்கியதாகவும், அதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 34 வயதுடைய மருமகனை கொகரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Title: கேகாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 55 வயது நபர் கொலை; மருமகன் கைது

Related Articles

Back to top button