யாழ்ப்பாணம்உள்நாடுவடக்கு மாகாணம்

யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் – இளம்பெண் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார்.

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், வீட்டில் இருந்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது படுகாயமடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் தாயார் மீதும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற இளைஞர், அரியாலை பகுதியில் கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Title: யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல் – இளம்பெண் உயிரிழப்பு

Keyword: Jaffna Crime News, யாழ்ப்பாணம் கொலை, Jaffna Woman Death, கத்திக்குத்து தாக்குதல், யாழ்ப்பாணம் பொலிஸ்

Permalink: jaffna-knife-attack-woman-death

Tags: Jaffna News, யாழ்ப்பாணம் செய்திகள், Jaffna Crime News, கத்திக்குத்து தாக்குதல், இளம்பெண் மரணம், யாழ்ப்பாணம் பொலிஸ், Jaffna Police

Related Articles

Back to top button