
னுமதிப்பத்திரம் இன்றி 6,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையை லொறியொன்றில் ஏற்றிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து குளியாபிட்டிய நோக்கி ஹட்டன் ஊடாக குறித்த கழிவுத் தேயிலை கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வைத்து குறித்த லொறியை நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கழிவுத் தேயிலை கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், கழிவுத் தேயிலை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




