உள்நாடு

தலைக்கவசங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை; ஆயிரக்கணக்கான தலைக்கவசங்கள் விற்பனைக்கு தடை

Desktop Image Mobile Image

தரமற்ற மற்றும் SLS தரச்சான்று முத்திரையற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகாரசபையின் அறிக்கையின்படி, SLS முத்திரையற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் அனைத்தும் சட்டவிரோதமான செயல்களாகும்.

இதன்படி, கடந்த 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 98 விசேட சோதனைகளில் 431-க்கும் அதிகமான தரச்சான்றற்ற தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், SLS அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 4,038-க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button