கல்விஉள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு விசேட கட்டுப்பாடு

Desktop Image Mobile Image

எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, பரீட்சையின் இரகசியத்தன்மையையும் நியாயமான நடைமுறையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் பரீட்சைகள் திணைக்களம் விசேட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், பாட விரிவுரைகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்ட கருத்தரங்குகள் நடத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடான பரப்புரைகள் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பான விதிமுறைகளை மீறும் தனிநபர்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, பரீட்சை காலத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button