கல்விஉள்நாடு

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பு

Desktop Image Mobile Image

2025 ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி துணை அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்னே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சார்த்திகளின் தகவல்களை புதுப்பித்தல் மற்றும் இறுதி செய்வதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜூன் 15 ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அவை தாமதமாகும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பரீட்சைத் துறை பேச்சாளர் ஒருவர், பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவை இறுதி நிலையிலுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

2025 ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தப் பரீட்சையில் மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமான தகவலாக அமைந்துள்ளது.

Related Articles

Back to top button