விளையாட்டுஉள்நாடு

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய அத்தியாயம்: வெற்றி அணிக்கு தங்க மோதிரம் வழங்கும் FIFA

Desktop Image Mobile Image

96 ஆண்டுகால பிபா உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக, இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

பொதுவாக உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கு கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால், வட அமெரிக்க விளையாட்டு மரபில் பிரபலமான “சாம்பியன்ஷிப் ரிங்” நடைமுறையை, இந்த ஆண்டு முதல் உலகக் கிண்ணத்திலும் அறிமுகப்படுத்த பிபா முடிவு செய்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளுக்கிடையில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியின் வீரர்களுக்கு மொத்தம் 30 தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த மோதிரங்கள் சாம்பியன் அணியின் சாதனையை நினைவுகூரும் வகையில் சிறப்பு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த உலகக் கிண்ணத்தை முன்னிட்டு மொத்தம் 2,026 மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாம்பியன் அணிக்கான 30 மோதிரங்களைத் தவிர, ஏனைய மோதிரங்கள் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்காக விற்பனை செய்யப்படவுள்ளன.

Back to top button