உலக செய்திகள்

ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை: “1,000 ஏவுகணைகள் தயார் நிலையில்”

Desktop Image Mobile Image

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன்னை படுகொலை செய்யும் வகையில் ஈரான் அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டால், அதற்கு பதிலடியாக 1,000 ஏவுகணைகள் உடனடியாக தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், முதல் கட்ட தாக்குதலுக்குப் பின்னரும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தொடர்ந்து ஏவப்படும் என எச்சரித்துள்ள அவர், அதற்கான அனைத்து இராணுவ உத்தரவுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ஈரானின் முக்கிய இலக்குகள் அனைத்தையும் தாக்கும் திறனுடன் அமெரிக்க இராணுவம் முழுமையான தயார் நிலையில் இருப்பதாகவும், தேவையானால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், தற்போதைய பதற்றத்திற்கு மத்தியில் அமைதியான தீர்வை எட்டும் நோக்கில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

Related Articles

Back to top button