இந்தியா

டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் திடீர் தீ விபத்து – முதலமைச்சர் புறப்பட்ட சில நிமிடங்களில் பரபரப்பு

Desktop Image Mobile Image

இந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதால் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவகப் பகுதியில் திடீரென தீ பரவியதையடுத்து அங்கிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

முதற்கட்ட விசாரணைகளின் படி, குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின்கசிவே தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

 

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button