உள்நாடு

கடும் வெப்பத்தில் பிள்ளைகளுக்கு ஆபத்து; பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்

Desktop Image Mobile Image

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட நேரம் கடுமையான வெயிலில் விளையாடுவதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலை ஏற்பட்டு இதயம் மற்றும் மூளைக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்கம் அல்லது தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் போன்றவை நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்குவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீருக்கு மேலதிகமாக இளநீர், ஜீவனி, எலுமிச்சை அல்லது நாரத்தை பானங்கள், பழச்சாறுகள், கஞ்சி மற்றும் சூப் போன்ற திரவ உணவுகளையும் வழங்குவது முக்கியம் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

சூரியன் உச்சிக்கு வரும் நேரங்களில் பிள்ளைகளுக்கு இலகுவான பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் ஓய்வெடுக்கச் செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை விடுமுறை காரணமாக பிள்ளைகள் வீடுகளில் அதிக நேரம் செலவிடும் நிலையில், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பெற்றோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Back to top button