Batticaloaஉள்நாடுகிழக்கு மாகாணம்

விபத்துக்குப் பின்னர் சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்

Desktop Image Mobile Image

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த பெண், சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விவசாயப் பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வந்துள்ளார்.

கடமையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன், சக உத்தியோகத்தர்களுடன் நல்லுறவைப் பேணி வந்ததாகவும் அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமன்றி, சக உத்தியோகத்தர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button