யாழ்ப்பாணம்உள்நாடுசெய்திகள்வடக்கு மாகாணம்

188 புள்ளிகளுடன் சாதனை படைத்த யாழ் மாணவன்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

நேற்று வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சாதனை பதிவாகியுள்ளது.

மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சு. சபின், தனது சிறப்பான பெறுபேற்றின் மூலம் பாடசாலைக்கும், குடும்பத்தினருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மாணவனின் இந்த வெற்றிக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், அவரது கல்வி பயணத்தில் இது முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.

மறுபுறம், சிங்கள மொழி மூலம் புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகள் அதிகூடிய பெறுபேறாக பதிவாகியுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் இந்த பெறுபேறு பதிவாகியுள்ளது.

Back to top button