உள்நாடுகிழக்கு மாகாணம்வானிலை
திருகோணமலையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09.01.2026) இரவு 10.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது.
இது நாளை (10) மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
அதன்படி, நாளை வடக்கு மாகாணத்தில் மணிக்கு 50 – 60 கிலோமீட்டர் வேகத்தில் மிதமானது முதல் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




