வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் திடீர் தீப்பரவல்

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் இன்று (05) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் வவுனியா மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் பிரிவினர், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீயணைப்புப் பிரிவினரின் துரித நடவடிக்கையினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், மேலும் பரவக்கூடிய அபாயமும் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
Title: வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் திடீர் தீப்பரவல்
Keyword: வவுனியா தீப்பரவல், Vavuniya Fire, தேசிய கல்வியற் கல்லூரி தீ, Vavuniya News, Vavuniya Fire Incident
Permalink: vavuniya-national-college-fire
Tags: வவுனியா, Vavuniya, தீப்பரவல், Vavuniya Fire, தேசிய கல்வியற் கல்லூரி, Vavuniya News, Fire Incident




