ஆரோக்கியம்

மன அழுத்தத்தை குறைக்கும் ஹெப்பி ஃபுட்ஸ்

Happy Foods That Reduce Stress

Desktop Image Mobile Image

இன்றைய அவசர உலகத்தில் அனைவருமே ஒருவித மன அழுத்தத்தில் தான் இருக்கின்றனர்.

அந்த மன அழுத்தத்தைப் போக்க மருத்துவரிடம் செல்கின்றோம். யோகா, தியானம் போன்றவற்றையும் கடைபிடிக்கிறோம்.

ஆனால், நாம் உட்கொள்ளும் சில உணவுகள்கூட நமது மன அழுத்தத்தைப் போக்கும் ஹெப்பி ஃபுட்ஸ் என்று கூறப்படுகிறது.

அவ்வகை உணவுகள் குறித்து பார்ப்போம்.

டார்க் சொக்லேட் – மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கும்.

வாழைப்பழம் – வாழைப்பழத்தில் உள்ளடங்கியிருக்கும் விட்டமின் பி6, பொட்டாசியம் ஆகியன மகிழ்ச்சியைத் தூண்டுகின்றது.

தயிர் – தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் பதற்றத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கும் ஹெப்பி ஃபுட்ஸ்/Happy Foods That Reduce Stress

பாதாம் – பாதாம் பருப்பை சாப்பிடும்போது மெக்னீசியம் அதிகமாகி எரிச்சல், உறக்கமின்மை போன்றவற்றை சரி செய்யும்.

ஓட்ஸ் – தேவையற்ற கோபம் வருவதைத் தடுத்து, நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க வைக்கிறது.

மீன் – இதில் உள்ளடங்கியிருக்கும் ஒமேகா 3 மனச்சோர்வை நீக்கும் வல்லமை கொண்டது.

முட்டை – நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மனநலத்தை மேம்படுத்தும்.

கீரை – கீரைகளில் உள்ள இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியன சோர்வை நீக்கும்.

Related Articles

Back to top button