உள்நாடு

டுபாயிலிருந்து 21 பாதாள உலக சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

Desktop Image Mobile Image

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தன.

அவ்வாறு திருப்பி விடப்பட்ட விமானங்களில் சிலவற்றிலேயே இந்த சந்தேகநபர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இந்த குழுவில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

மஹவத்தே சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button