இந்தியா
டிக்கெட் எடுத்து பேருந்தில் சென்ற முதல்வர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் நோக்கிச் செல்லும் 29ஏ அரசுப் பேருந்தில் டிக்கெட் பெற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் 300 புதிய பேருந்துகளை சேவையில் இணைக்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், பொதுப் போக்குவரத்து சேவையின் அனுபவத்தை நேரடியாக அறியும் வகையில் முதல்வர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த போது ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், பொதுமக்களுடனும் இயல்பாக பழகியுள்ளார்.
அவரது இந்த நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
